Tuesday, May 28, 2019

Life

மனித வாழ்வு.. 💬

பல எதிர்பார்ப்புகள் ஆசைகள் கனவுகள் என எண்ணற்ற உணர்வுகளை கையாண்டு கொண்டு மனிதன் பிறப்பில் துவங்கி இறப்பு வரை பயணிக்கும் ஒரு பயண நேரம்..

மனிதன் பிறக்கும் பொழுது தோன்றும் எதிர்பார்ப்புகளும் இன்பமும் அந்த உயிர் வாழும் குடும்பத்திலே துவங்கும்.

உலகில் வந்த உயிரின்  முதல் சுவாசம் அந்த உயிரின் முதல் வெற்றி.

தவழ துவங்கி நடை பயின்று உணவு உண்ண மறுத்து அதற்காக அழுது விளையாடி கழித்து இன்பமாய் உறங்கி .. இரு வயது வரை அது சொர்கம் போல இருக்கும். 

மழலை மொழி கற்று மனதின் மொழியை வெளிப்படுத்தும் அந்த ஓசை சிலை போன்ற மனிதரையும் ரசித்து மகிழ செய்யும். 

வயது அதிகரித்து பள்ளியில் சேர்க்க மழலையின் முதல் நாள் மிரட்சியோடும் பிற நாட்கள் எப்பொழுது வீடு செல்வோம் என்ற எண்ணத்தோடும் நடந்து செல்லும்.

வளர வளர நிறைய தெளிவுகள் ..

தாயிடம் அன்பு தந்தையிடம் பாதுகாப்பு குடும்பத்துடன் மகிழ்ச்சி உடன் பிறப்புகளுடன், நண்பர்களுடன், ஆசிரயரிடம்,  அறிந்தோர் தெரிந்தோரிடம் என்று அந்த உயிர் வாழ்க்கை பாடம் பயிலும்.

உலகம் அதன் கண் முன்னே வைக்கும் ஒவ்வொரு பொருளின் பின்புலம் அறிய ஆர்வம் கொள்ளும்.. 

அதன் உள்ளே தோன்றும் எண்ணங்கள் அதன் பாதையை தேர்ந்தெடுக்க உள்ளே ஓர் நினைவு சேர்க்கும்..

பள்ளி காலம் எல்லா மனிதனுக்கும் பல நீங்கா நினைவுகள் பதித்து தரும்.. நட்பின் மகிழ்ச்சி அறிய அறிவின் முதிர்ச்சி  உலகை முழுதாய் அறிய என்று தவழ்ந்த உயிர் உலகில் நடைபோட்டு உலகநடை அறியும் நேரம் அது...

முழுதாய் புரியாமல் முக்கால் வாசி உலகநடை தெரிந்திடும்..

பள்ளி முடிந்து கல்லூரி செல்லும் போது... சுய சுதந்திரம் கொஞ்சம் அதிகமாய் கிடைக்கும் காலம் இது. வளர்ந்த பிள்ளை என வீட்டிலும் ஒரு எண்ணம் தோன்றும்.. வாழ்வை பயிலட்டும் என்று விட்டு பார்ப்பர்.

ஆனால் முக்கியமான பல குழப்பங்கள் தோன்றும் காலமே இது தான்.

சில உணர்வுகள் சொல்லிலடங்காது அதில் முதல் வரி காதல்.. குழப்பத்தின் உச்சத்தில் வாழ்வின் எதிர்காலம் இருக்க வயதின் மாற்றம் முழுநடை போட்டு அங்கே தான் அழைத்து செல்லும்..

தெளிவான சிந்தனை கொண்ட மனிதர்கள் வாழ்வின் முக்கியத்துவம் உணர்ந்து நடப்பர். ஆனால் வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்வாய் இது தோன்றிடும். சிலருக்கு மாறாத மகிழ்வாய் பலருக்கு ஆறாத ரணமாய்..

கல்லூரி வாழ்வில் கவலைகள் கம்மி..  அதிக பட்ச துன்பமே அங்கே தேர்வு குறித்து தான்..  நமக்கான நண்பர்கள் பட்டாளம் அதிகமாய் அங்கே இருக்க வாழ்வில் வண்ணங்கள் சேர்க்க தான் எண்ணம் தோன்றும் நினைவுகளால் .. 

பல்வேறு சூழ்நிலைகளை கடந்து உண்மையாக வாழ்வை உணரும் முதல் படியே கல்லூரி வாழ்வு கடந்து வேலை தேடும் அந்த தேடல் தான்.

"நான் லாம் காலேஜ் ல மாஸ் டா" என்று இருந்த பலர் வேலை தேடி வேகும் போது காலேஜ் லேயே ஒழுங்கா படிச்சிருக்கலாம் னு நினைக்க வைக்கும் சக்தி உண்டு இந்த நிலைக்கு.. 

பிடித்த வேலை கிடைத்த மகிழ்ச்சி சிலருக்கு பிடிக்காத வேலையில் சிக்கி கொள்ளும் நிலை பலருக்கு.. 

வாழ்க்கைல பல விஷயங்கள் எவ்வளவு முக்கியம் என்று முழுதாய் பயில நிலை இதுதான் ஆனால் அதற்கு முன்னே பல நல்ல வாய்ப்புகள் தவறி போயிருக்கும்.

ஆனால் அதிலும் ஒரு சில மனிதர்கள் உழைப்பு, வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுதல், புது சிந்தனை என்று இழக்க இருந்த வாழ்வை  விடா முயற்சியில் வேறு பாதையில் மாற்றி போடுவார்..

உண்மையில் மனித வாழ்வு வெற்றியில் கலந்த தோல்வியால் நிறைந்தது.. அது பல்வேறு துன்பங்களால் தொடுக்க பட்ட அழகான இன்ப மாலை..

அதனை எந்த பாதையில் அந்த உயிர் பயணிக்க பணி  செய்கிறதோ அதுவே.. அந்த உயிரின் வாழ்வாகி முடிகிறது...👀











HAPPY LIFE and HAPPY SOUL _V - UNLEARNING

Knowing what is wrong is way more important than knowing what is right!      Unlearning is a process of discarding an idea, perception, tabo...