Wednesday, January 16, 2019

பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள் ..


தமிழர் திருநாளாம் தை பொங்கல் ஜாதி இனம் மதம் போன்ற பல வேறுபாடுகளை கடந்து உலகில் உள்ள அனைத்து தமிழ் பெருமக்களால் மகிழ்வாக கொண்டாட படுகின்றது. 

தை மாத பிறப்பின் முதல் நாள் தை பொங்கல் என்று அழைக்கப்படுகின்றது இது விவசாயத்தின் செயல்பாட்டில் முதலிடம் வகித்து உதவும் சூரியனை நினைவு கூர்ந்து சூரியன் உதயமாகும் காலை பொழுதில் மஞ்சள்,கரும்பு என பல  மங்கள பொருட்கள் இடம் பெற பொங்கலோ பொங்கல் என பொங்கும் இனிய பால் பொங்கலோடு வாழ்வும் வளமும் விவசாயமும் பொங்கி வளர  வேண்டும் என இறைவனை வேண்டி விருந்து படைத்தது புத்தாடை அணிந்திட   குடும்பத்துடன் கொண்டாட படும் திருநாள். பொங்கலோ பொங்கல் எனும் வார்த்தை கேட்பதே அதன் தனி ஆனந்தம் தரும்.

தை மாதத்தின் இரண்டாம் நாள் உழவிற்கும் உழவனிற்கும் உழைத்து உதவும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் கொண்டாட படும் திருநாள் அன்று மாடுகளை அலங்காரம் செய்து அவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு படைத்தது அவற்றிக்கு அளித்து தமது நன்றியையும் அன்பையும் தெரிவிப்பர். இந்நாளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற மாடுகளை மையப்படுத்தி வீரம் சிந்தும் விளையாட்டுகளை நடத்துவது வழக்கம். பல நாள் உழைத்து களைத்த மாடுகளை ஒருநாளில் அழகு செய்து ஊர் தெருக்களில் உலவிட செய்யும் பொது அதன் அழகிய கொம்புகளும் நிமிர்ந்த திமில்களும் தனி இன்பம் தமிழர்கள் தங்களின் மாடுகளை குடும்பத்தில் ஒருவராகவே பாவிப்பதை இயல்புடையவர்கள் அதனை மாட்டுப்பொங்கல் அன்று இன்னும் அழகாய் வெளிப்படுத்துவது இந்நாளின் தனி சிறப்பு.

காணும் பொங்கல் தை மாதத்தின் மூன்றாம் நாள் இந்நாளில் இறைவனை தொழுது பெரியோர்களிடம் ஆசி பெற்று அதனோடு  அவர்கள் அன்போடு அளிக்கும் பரிசும் பெற்று மகிழ்வர் இந்நாளில் பல வெளி  இடங்களுக்கு உற்றாரின் வீடுகளுக்கு  சென்று மகிழ்ந்து கொண்டாடி சிறப்பிப்பர். இந்நாளில் பல வகையான விளையாட்டுகளும் விளையாடி இன்பம் சேர்ப்பர். ஒவ்வொரு தமிழனின் மன உணர்வில் நீங்கா இடம் கொண்ட பொங்கல் திருநாள் இன்று கடல் கடந்து வாழும் தமிழர்களால் பல நாடுகளில் மகிழ்வாய் கொண்டாட படுக்கின்றது.

சிறப்பான இந்நாளில் அன்பை பகிர்வோம்  இன்பத்தை  பரப்புவோம் அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

2 comments:

HAPPY LIFE and HAPPY SOUL _V - UNLEARNING

Knowing what is wrong is way more important than knowing what is right!      Unlearning is a process of discarding an idea, perception, tabo...